இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் டிச 13ல் மொஹாலி காவல்துறையில் பணியாற்றும் மோப்ப நாய் தோனி ஓய்வு பெறுகிறது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் வரும் 13ஆம் நடைபெறுகிறது. இந்தப்போட்டியன்று மொஹாலி போலீசில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்த மோப்ப நாய் தோனி, ஓய்வு பெறுகிறது. மொஹாலியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது தோனி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும். 2011ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.இந்தப்போட்டி நடைப்பெறும்போது இரு நாட்டு பிரதமர்களும் குஜராத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது இந்த மோப்ப நாய் பாதுகாப்பு பணியில் இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தோனியுடன் ஜான், பிரீத்தி என மேலும் இரண்டு மோப்ப நாய்களும் ஓய்வு பெறுவதாக மொஹாலி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.