ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் தொடங்கியது. 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தலைநகர் ராஞ்சி, ஹாடியா, ராம்கார்ஹ், கான்கே ஆகிய தொகுதிகளில் மாலை ஐந்து மணி வரையும், பிற 13 தொகுதிகளில் மாலை மூன்று மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நக்சல் பாதிப்பு அதிகம் என்பதால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக நடக்கும் தேர்தலில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.