உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா ஸ்வாமிநாதனும், தற்போது விற்பனையிலிருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்து பேசியிருக்கிறார்.
“கொரோனா அடுத்த அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். அது விரைவில் நடக்குமென்றாலும், இந்த வருடம் அது நடக்குமா என்பது கேள்விக்குட்பட்டு இருக்கிறது. குழந்தைகளை நோய்க்கு எதிராக மாற்ற, ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரிய அளவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகப்பரவல் குறைவாகும்போது, பள்ளிகளை திறக்கலாம். அப்படி திறக்கும்போது, ஆசிரியர்களும் பெற்றோரும் தடுப்பூசி போட்டிருந்தால், மூன்றாவது அலையை கையாள்வதில் சிக்கல் இருக்காது” எனக்கூறியுள்ளார்.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர், பயோ என்டெக் தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டு, பல இடங்களில் தரப்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவில், இவற்றோடு மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அங்கு, டீனேஜருக்கு மட்டுமன்றி, 16 வயதுக்குட்பட்ட டீனேஜர் அனைவருக்கும் தரப்படவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசியும், குழந்தைகளுக்கான தங்கள் தடுப்பூசி ஆய்வுகளை தொடங்கியுள்ளன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி ஆய்வு, 6 முதல் 17 வயது வரையிலான அனைவருக்கும் மத்தியில் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, இந்த தடுப்பூசி ஏற்கெனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தரப்பட்டு வருகின்றது.
இதுவொருபுறம் இருக்க, குழந்தைகளுக்கான தடுப்பூசியில் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் பௌல் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “இப்போதைக்கு பைசர் மட்டுமே இங்கு குழந்தைகளுக்கு தரப்பட தயாராக உள்ளது. இருப்பினும் அவற்றின்மீது கூடுதல் கவனம் தரப்பட்டு, மேற்கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
கூடிய விரைவில் இந்தியாவிலும் இந்தத் தடுப்பூசி விநியோகத்துக்கு வர வேண்டுமென்பதே பலரின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.
உலகளவில், குழந்தைகளுக்கு தரப்பட தயாராகிவரும் தடுப்பூசிகள்:
தகவல் உறுதுணை: News18