இந்தியா

இங்கெல்லாம் இருக்குறவங்க ரொம்ப ஜாலியா இருக்காங்களாம்!

இங்கெல்லாம் இருக்குறவங்க ரொம்ப ஜாலியா இருக்காங்களாம்!

webteam

இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் மிசோரம், பஞ்சாப் மற்றும் அந்தமான நிகோபார் தீவுகள் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த கருத்துக்கணிப்பை மேலாண்மை நிபுணரான ராஜேஷ் பில்லானியா என்பவர் நடத்தியுள்ளார்.

நாடு முழுவதும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையில் 16, 050 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. வேலை, உறவுகள், சுகாதாரம், உதவி, மதம், ஆன்மிகம் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட கூறுகளில், மக்களின் மகிழ்ச்சி பற்றி கருத்து கேட்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் உத்தரகாண்ட், ஓடிசா ஆகிய மாநிலங்கள் கடைநிலையில் உள்ளன. குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன. திருமணமாகாதவர்களை விட திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

வேலை தொடர்பான மகிழ்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் அசாம், பஞ்சாப், அந்தமான், மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உள்ளன. உறவுகள் தொடர்பான பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மிசோராம், அந்தமான், பஞ்சாப், கர்நாடகா மற்றும் சிக்கிம் ஆகியவை உள்ளன. ஹெல்த் தொடர்பாக அந்தமான், லட்சத்தீவு, மிசோராம், பஞ்சாப் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

மதம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் மற்றும் லடாக் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன. முதல் 23 இடங்களில் தமிழகம் எந்த இடத்திலும் இல்லை.