தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளது.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.