இந்திய அஞ்சல் துறையின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தப்பட்சம் 500 ரூபாய் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது அஞ்சல் துறை. குறைந்தபட்ச இருப்பு இல்லாத வங்கி கணக்கின் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராத கட்டணமாக 100 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தனி நபர் மற்றும் கூட்டு கணக்கு வைத்திற்குக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டியை கொடுத்து வருகிறது அஞ்சல் துறை.
நிதியாண்டின் இறுதியில் வங்கி கணக்கின் இருப்பு 500 ரூபாயாக உயர்த்தப்படா விட்டால் 100 ரூபாய் வங்கி கணக்கு பராமரிப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும். அதே போல பூஜ்ஜியத்தில் இருக்கும் வங்கி இருப்பின் கணக்குகள் தானாகவே மூடப்படும். மேலும் 500 ரூபாய்க்கு கீழ் இருப்பு இருந்தால் அந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் பண பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வடிக்கியாளர்கள் தங்களது விவரங்களை மீண்டும் சமர்ப்பித்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.