இந்தியா

"இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை, மிகவும் ஏமாற்றம்" - காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

"இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை, மிகவும் ஏமாற்றம்" - காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

Veeramani

இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை, இது ஒரு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "மிகவும் ஏமாற்றம், ஒரு ஈரமான வானவேடிக்கை. இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று தெரிகிறது, இது ஒரு வியக்கத்தக்க ஏமாற்றம் தரும் பட்ஜெட். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு, பாதுகாப்புத்துறை , பொதுமக்கள் எதிர்கொள்ளும் வேறு எந்த அவசர முன்னுரிமைகள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நாம் பயங்கரமான பணவீக்கத்தை எதிர்கொள்ளும் சூழலில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு இல்லை. 'நல்ல நாட்கள் வருகின்றன' (அச்சே தின்) என்ற மாயையை இன்னும் தொலைவில் தள்ளுவது போன்ற பட்ஜெட் இது. இந்தியாவுக்கு நல்ல நாட்கள் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்