இந்தியா

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால்... - நிதியமைச்சகம் அளித்த புது விளக்கம்!

webteam

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குடியிருப்பை தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடும் பட்சத்தில் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் பரவிய நிலையில் இவ்விளக்கத்தை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நோக்கத்திற்கு குடியிருப்பை வாடகைக்கு விட்டால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் அரசு தெரிவித்துள்ளது.