இந்தியா

''மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதல்வர் பதவி''- ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

jagadeesh

மகாராஷ்டிராவில் தங்களுக்கு சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தானே தொகுதி எம்எல்ஏவான ஏக்நாத் ஷிண்டே தலைவராகவும், கட்சியின் கொறடாவாக சுனில் பிரபுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர ஆளுநரை ஆதித்ய தாக்கரேவும் ஏக்நாத் ஷிண்டேவும் சந்தித்தினர். இதன் பின் பேசிய தாக்கரே, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.