உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இடத்தில் இரண்டு ரயில் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சிதாப்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை. இதற்குப் பின் ரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தில் இருந்த கோளாறை சரிசெய்யாத காரணத்தால், அதே இடத்தில் இன்று காலை புர்ஹ்வாலாவில் இருந்து பலாமா செல்லும் பயணிகள் ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் உள்ள பழைய ரயில் இருப்புப் பாதைகள் உடனே மாற்றப்படும் என உறுதியளித்த நிலையில் தண்டவாளத்தில் இருந்த கோளாறால் விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இது இந்த மாதத்தில் நடக்கும் 7வது ரயில் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.