இந்தியா

இன்டஸ்ட்ரி என்ற வார்த்தையையே இன்டஸ் நதியிலிருந்து வந்ததுதான்..

இன்டஸ்ட்ரி என்ற வார்த்தையையே இன்டஸ் நதியிலிருந்து வந்ததுதான்..

webteam

இன்டஸ்ட்ரி என்ற வார்த்தை, இன்டஸ் நதியைப் பார்த்து வெள்ளைக்காரன் காப்பி அடித்ததுதான் என்று பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் விக்யனானந்த்.

பெங்களூரில் உலக ஹிந்து பொருளாதார மையம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய வி.ஹெச்.பி. அமைப்பின் தலைவர்களில் ஒருவரான விக்யனானந்த், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்தபோது இங்கு இருந்த தொழில் வளர்ச்சியைப் பார்த்து, இன்டஸ் நதியின் பெயரை பயன்படுத்தி அதாவது சிந்து நதியின் பெயரைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளுக்கு இன்டஸ்ட்ரி என்று பெயர் வைத்தார்கள். ஆகவே இன்டஸ்ட்ரி என்ற பெயர் நம்மிடமிருந்து சென்றதுதான். ஏனென்றால் நாம் அப்போதே தொழில் வளர்ச்சி அடைந்தவர்களாக இருந்தோம். இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள், வங்கி நிர்வாகிகள், வணிகர்கள் என பலதுறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இன்டஸ்ட்ரி என்ற வார்த்தை 15 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழியில் உருவான வார்த்தை என்றும், அந்த வார்த்தை லத்தீன் மொழியில் உள்ள இன்டோஸ்ட்ரஸ் என்ற வார்த்தையிலிருந்து மருவி இன்டஸ்ட்ரியா என்றாகி ‘இன்டஸ்ட்ரி’ என்றானது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.