இந்தியா

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

webteam

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது, ஹூட் என்ற ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பின் ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 3 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது 46 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கைது உள்ளிட்ட 27 நடவடிக்கைகளை பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் பத்திரிகையாளர்களுக்கு விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஹூட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம் முழுமையாக உள்ள மாநிலமாக சிக்கிம் இருக்கிறது. அதே நேரத்தில் காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவமதிப்பு வழக்கு, காவல்துறை நடவடிக்கை, மிரட்டல் உள்ளிட்ட வகையில் 18 நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.