ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாஸ்திரி நகரில் உளாள் கன்வட்டியா அரசு மருத்துவமனையிலிருந்து தடுப்பூசிகள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திருட்டு செவ்வாய் இரவு தெரியவந்ததாகவும் அதன் அடிப்படையில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திங்கட்கிழமையே திருட்டு நடைபெற்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் ஒரு புறம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.