இந்தியா

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா? - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா? - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு

rajakannan

ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான வழக்கில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள் பலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு பின்னர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்கின்றனர். பிரதமர் மோடி கூட கடந்த மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல், இந்திரா காந்தி, பிஜு பட்நாயக், என்.டி.ராமாராவ் போன்ற மறைந்த தலைவர்கள் பலரும் இவ்வாறு போட்டியிட்டுள்ளனர். தற்போது, சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் போன்ற தலைவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டுள்ளார்கள். இதுபோன்று ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார்.  

இந்த வழக்கு விசாரணையின் போது, “இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும்” என்ற பரிந்துரையை தேர்தல் ஆணையம் முன் வைத்துள்ளது. 33(7) மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம் என்ற யோசனையை கூறியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.