இந்தியா

"பிபின் ராவத் மறைவு ஒவ்வொரு தேசபக்தருக்கும் பேரிழப்பு" - பிரதமர் மோடி

"பிபின் ராவத் மறைவு ஒவ்வொரு தேசபக்தருக்கும் பேரிழப்பு" - பிரதமர் மோடி

EllusamyKarthik

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறப்பு தேசபக்தியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பேரிழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் சரயு கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். இந்தியாவின் முப்படைகளும் சுயசார்பு நிலையை அடைய பிபின் ராவத் கடுமையாக உழைத்தார் என தெரிவித்த பிரதமர், அவர் எங்கே இருந்தாலும் இந்தியாவின் உத்வேகத்துடன் கூடிய வளர்ச்சியை காண்பார் என்றும் பேசினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் அவர் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சவால்களை அரசு திறம்பட சமாளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் சரயு உள்ளிட்ட 5 நதிகளை கால்வாய்கள் மூலம் இணைக்கும் திட்டத்தால் 14 லட்சம் ஹெக்டேர் வயல்களும் 29 லட்சம் விவசாயிகளும் பலன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.