இந்தியா

குடியரசு தினவிழா: பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பின் போது ஒலித்த ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

webteam

டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் “ சாமியே சரணம் ஐயப்பா” கோஷம் ஒலிக்கப்பட்டது.

72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய பின்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு மாநிலமும் தங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார அணிவகுப்பில் ஈடுபட்டனர். 

அந்த வகையில் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் பெருமையை பறை சாற்றும் வாகன அணிவகுப்பு நடந்தது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரியுடன் வாகனம் அணி வகுத்துச் செல்ல பெண்கள் பரத நாட்டியம் ஆடினர்.

ராணுவத்தின் 861 ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்றது. அந்த அணிவகுப்பில் ‘துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்களுடன், ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது.