தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு சாதகமாகவே அமையும் என்று நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் புதுடெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளரும் டெல்லி மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்குகின்றன. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் புதுடெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் கூறும்போது, ‘’தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ராகுல் காந்தி பிரதமர் ஆவார். டெல்லியில் காங்கிரஸ் கட்சிக் கும் பாஜகவுக்கும்தான் போட்டி. வேறு யாருக்கும் இல்லை’’ என்று தெரிவித்தார்.
புதுடெல்லி தொகுதியில் அஜய் மக்கானை எதிர்த்து பாஜக சார்பில் மீனாட்சி லேகி போட்டியிடுகிறார்.