நாய் குட்டி ஒன்று முதலையை குலைத்தும் துரத்திச்சென்றும் ஓடவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முதலைகள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா என பல நாடுகளின் ஆறுகளிலும் குளங்களிலும் வாழ்கின்றன. மற்ற விலங்குகள் போல் நேரடியாகத் தாக்காமல் நீரில் மறைந்திருந்து தாக்குவதற்கு புகழ் பெற்றவை. அதன் பற்களும், உடம்பின் தோள்களும் மான், மாடுகள் மட்டுமல்ல புலி, சிங்கமே வீழ்த்திவிடும் தன்மை கொண்டது. இவை மட்டுமல்ல, மனிதர்களே முதலை தாக்குதலுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பலம் கொண்ட முதலையை நாய்க்குட்டி ஒன்று துணிச்சலோடு துரத்திச் செல்கிறது. வனத்துறை அதிகாரியான சுதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் “நாய் குட்டி நீரில் இருந்து கரையில் படுத்திருக்கும் முதலையில் அருகில் சென்று குரைக்கிறது. இந்த திடீர் சத்தத்தை எதிர்பார்க்காத முதலை பயத்தில் தப்பித்தாவி நீரை நோக்கி பாய்கிறது.
ஆனால், பலங்கொண்ட முதலையை பயம் இல்லாமல் நாய் பின்னே துரத்திச் செல்கிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்குமே புதிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்று பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.