இந்தியா

நிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் ஒப்புதல்

நிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் ஒப்புதல்

webteam

நிதிஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். நிதி ஆயோக் உறுப்பினர்களில் ஒருவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 

இதன்படி, நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக ராஜீவ்குமாரும் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பியூஷ் கோயல், உள்ளிட்டோர் சிறப்பு உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருக்கும் பொருளாதார நிபுணர் ராஜீவ் குமார் மீண்டும் அதே பதவியில் நீடிக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும் 15ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.