இந்தியா

இணையம் மூலம் கருவின் பாலினம் கண்டறியும் வசதியை நீக்க புதிய அமைப்பு

இணையம் மூலம் கருவின் பாலினம் கண்டறியும் வசதியை நீக்க புதிய அமைப்பு

webteam

கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவது தொடர்பான தகவல்களை இணையதளங்களில் இருந்து நீக்குவது தொடர்பாக அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகவலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கருவின் பாலினத்தை கண்டறிவது தொடர்பான விளம்பரங்கள், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த தேடலை கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் இணையதளங்களிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பணிகளை அந்த அமைப்பு செய்யும் என அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் வெகுவாக குறைந்து வருவதாக சாபு மேத்யூ ஜார்ஜ் என்ற மருத்துவர் தொடர்ந்த பொது நல மனுவில் இந்த உறுதிமொழியை மத்திய அரசு அளித்துள்ளது. இணையதளத்தில் பாலினத்தை கண்டறியும் வழிமுறைகளை பயன்படுத்தி பல தம்பதிகள் பெண் குழந்தைகளை கருவிலேயே கலைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.