இந்திய பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 21 பொதுத் துறை வங்கிகளில் மொத்த வாராக்கடன் 2016 மார்ச் மாத நிலவரப்படி 76 ஆயிரத்து 730 கோடியாக இருந்தது. அது கடந்த ஜூன் மாத இறுதியில் 67 சதவிகிதம் உயர்ந்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
2016 ஏப்ரல் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் புதிதாக ஆயிரத்து 186 பேரை, வசதியிருந்தும் கடனை திரும்பச் செலுத்தாத கடன் ஏய்ப்பாளர்களாக பொதுத் துறை வங்கிகள் அறிவித்துள்ளன. இதன்மூலம், இதுவரை 9 ஆயிரத்து 501 பேர் கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடன் ஏய்ப்பு தொடர்பாக 2 ஆயிரத்து 348 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.