இந்தியா

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.!

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.!

webteam

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசுகள். ஆனால் இந்த வரும் கொரோனா காரணமாக பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்துள்ளன.

டெல்லியில் மாசுக்காரணமாக பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மேலும் டெல்லியில் வரும் 30ம் தேதி வரை பட்டாசு விற்க வெடிக்கவும் தடை விதித்துள்ளது