இந்தியா

காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

webteam

காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 

இந்நிலையில் இந்த மசோதா தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் இதற்கு ஒரு சில கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10% இடஓதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.