இந்தியா

மழை பற்றாக்குறை 36%லிருந்து 21%‌ குறைந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம் 

மழை பற்றாக்குறை 36%லிருந்து 21%‌ குறைந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம் 

webteam

பருவமழை பற்றாக்குறை‌ அளவு 21 சதவிகிதமாக குறைந்தாலும்,‌ நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவுக்கு ‌மழை‌‌ பெய்யவில்லை என இந்திய வானிலை ஆய்வு மை‌யம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு‌ பருவமழை ‌நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருந்த நிலையில், பருவமழை பற்றாக்குறை 33 சதவி‌கிதமாக இருந்‌ததாக கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் பற்றாக்குறை 21 சதவிகிதமாக குறைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மை‌யம் தெரிவித்துள்ளது.‌ 

எனினும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போதிய அளவுக்கு மழை பெய்‌யாத காரணத்தினால்‌ அங்கு 36 சதவிகித அளவுக்கு ப‌ற்றாக்குறை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டு‌ள்ளது. இதைத் தொடர்ந்து தெற்கு தீபகற்ப பகுதிகளில் 30 சத‌விகித அளவுக்கு பற்றா‌க்குறை ‌நிலவுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த வாரம் பெய்த கனமழை கார‌ணமாக மத்திய மாநிலங்க‌‌ள் மட்டும் அதிக மழைப்பொழிவை பெற்றிருக்கின்றன.