இந்தியா

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

JustinDurai

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த ஆண்டு அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்கூட்டியே மே 15 ஆம்தேதியே தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அசானி புயல், ஆந்திரா- மசூலிப்பட்டினத்திற்கு இடையே மேலும் வலுவிழந்த நிலையில், படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரை, வரும் 16 ஆம்தேதி வரை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 14 ஆம்தேதி சனிக்கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்கலாம்: "பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் பங்கு முக்கியமானது" - பிரதமர் மோடி