இந்தியா

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவம் வான்வழி பயிற்சி

JustinDurai
கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவம் வான்வழி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் ராணுவத்தின் சதுர்ஜீத் பிரிவு வீரர்கள் 14,000 உயரத்தில் வான்வழியாக பாராசூட் மூலம் தரையிறக்கபட்டனர். இவர்கள் சி 130 மற்றும் ஏஎன் 32 விமானங்கள் மூலம் 5 வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டனர். சரியான இலக்கில் தரையிறங்கச் செய்வது, விரைந்து ஒன்றாக இணைவது, குறிக்கோளை அடைவது உள்ளிட்டவற்றிற்காக பயிற்சி வழங்கப்பட்டது.