வருமான வரி அடையாள எண்ணான பான் கார்டுடன் ஆதார் எண்ணை மின்னணு முறையில் இணைப்பதற்கான இணைய தள வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்திருக்கிறது.
வருமான வரித் தாக்கலுக்கான income tax india efiling.gov.in என்ற இணைய தளத்தில் இதற்கான எளிய வழி தரப்பட்டிருக்கிறது. அதில் ஒருவரது பான் எண், ஆதார் எண் இரண்டையும் பதிவு செய்து, ஆதார் அட்டையில் உள்ளபடி பெயரைப் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். வருமான வரித் தாக்கலுக்கு பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.