இந்தியா

பாம்பாக மாறிவரும் 16 வயது பெண்.. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட கொடுமை...!

பாம்பாக மாறிவரும் 16 வயது பெண்.. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட கொடுமை...!

webteam

இந்தியாவை சேர்ந்த 16 வயது பெண் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு அவருடைய தோற்றம் பாம்பு போன்று மாறிவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாலினி யாதவ் (16). இவர் எரித்ரோடேர்மா என்ற தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய தோல் சிவப்பு நிறத்தில் மாறி அதன் பின்னர் வறண்டு விடுகிறது. 6 வாரங்களுக்கு பின் தோல் உதிர்வது போன்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

‘ரெட் மேன் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படும் இந்த நோய் சிறு வயதிலிருந்தே ஷாலினிக்கு இருந்துள்ளது. ஆனால் இந்த கொடிய நோய்க்கு மருத்துவர்களால் இன்னும் நிரந்தர சிகிச்சை அளிக்க முடியவில்லை. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரில் தனது உடல்களை நனைத்து கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு தன்னுடைய உடலை ஈரப்பதமாகவே வைத்துக் கொள்ளவதன் மூலம் தோல் வறண்டு போவது குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாம்புகளில் இருக்கும் உடல் அமைப்பு போன்று ஷாலினி உடல் காணப்படுகிறது எனக்கூறி அவரது பள்ளியில் அவருடன் படிக்கும் சக மாணவ, மாணவிகள் இவரை கண்டு அஞ்சுவதால், அவரை பள்ளியில் இருந்து நிர்வாகத்தினர் வெளியேற்றியுள்ளனர்.

இதுகுறித்து தாயார் தேவ்குமார் கூறுகையில், தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஷாலினி இந்த நோயினால் மிகவும் சிரம படுவதாக தெரிவித்துள்ளார். எனக்கு அவளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவருடைய தோற்றத்தை கண்டு பள்ளியில் ஷாலினியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கண்ணீருடன் கூறுகிறார். இந்த கொடிய நோயை முடிந்த அளவிற்கு குறைப்பதற்கு தங்களிடம் போதிய பணம் இல்லை எனவும், யாரேனும் என் பெண்ணுக்கு உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ஷாலினி யாதவ் கூறுகையில், நான் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் மாணவர்கள் என் முகத்தை பார்த்து பயந்து விட்டார்கள் இதனால் பள்ளி நிர்வாகம் என்னை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டது. நான் என்ன பாவம் செய்தேன்..? எதற்காக நான் இப்படி சபிக்கப்பட்டேன். நான் வாழ விரும்புகிறேன் ‘உங்களால், எனக்கு உதவ முடியும் எனில் உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.