இந்தியா

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

JustinDurai

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மக்கள் உற்சாகமாக ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிருந்தாவனத்தில் உள்ள BANKE BIHARI கோயிலில் ஒன்று திரண்டு மிகுந்த உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதே போல பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஹோலியை கொண்டாடுகின்றனர். எனினும் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் ஹோலி கொண்டாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான் , பீகார் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் மக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.