இந்தியா

முப்படைகளை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி - மத்திய அரசு திட்டம் 

முப்படைகளை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி - மத்திய அரசு திட்டம் 

webteam

இந்தியாவின் முப்படைகளை நவீனப்படுத்த அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ரூ.9.35 லட்சம் கோடி செலவிட ‌மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முப்படைகளின் உள்கட்டமைப்பு வ‌சதிகளை மேம்படுத்தவும், மற்ற வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போல் இராணுவத்தை நவீனப்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், தரைப்படைக்கான 2 ஆயிரத்து 600 போர் வாகனங்களை கொள்முதல் செய்யவும், விமானப் படைக்கு 110 அதிநவீன போர் விமானங்களை கொள்முதல் செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

சீனா உள்ளிட்ட நாடுகள் இராணுவத்தில் நவீனத் தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் நிலையில், இந்தியாவும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை முப்படைகளில் சேர்க்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் விமான படையின் தளங்களை உருவாக்கும்‌ முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் உள்நாட்டிலேயே இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்காக ந‌டவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.