மாவோயிஸ்ட்டுகளை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு வெற்றி கிடைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கிழக்கு மண்டல தலைமை அலுவலகத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார். நாட்டில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை முடிவுக்கு வருவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் மேலும் 35 ஆயிரம் வீரர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயரும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.