போட்டி, கூட்டுறவு, கூட்டாட்சிதான் நாட்டுக்கு மிகவும் நல்லவை என பிரதமர் நரேந்திர மோடி, சமூகநீதியை நிலைநாட்டுவதுதான் நமது குறிக்கோள் என பேசியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சி அதிகமுள்ள சில மாவட்டங்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு வளர்ச்சி குறைவான மாவட்டங்களில் மீது நாம் என்னென்ன கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றியும் அறிவுத்தினார். மக்களின் பங்களிப்புதான் எப்போதுமே முன்னேற்றத்திற்கு உதவும் எனக் கூறிய பிரதமர், அதிகாரிகள் எங்கெல்லாம் மக்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களை வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுத்தி உள்ளார்களோ அங்கெல்லாம் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறினார். தேவையான ஆற்றலும், திறமையும் மக்களிடம் இருப்பதாக தெரிவித்த பிரதமர், சேவையாற்றி சமூகநீதியை நிலைநாட்டுவதுதான் நமது குறிக்கோள் எனக் குறிப்பிட்டார்.