இந்தியா

இறக்குமதி கச்சா சமையல் எண்ணெய்கான வரியை குறைத்தது மத்திய அரசு

kaleelrahman

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

நாட்டின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அண்மை காலமாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சாமான்ய மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா சூரிய காந்தி மற்றும் சோயா எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலை உயர்வை தடுத்து கட்டுப்பாட்டில் வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.