இந்தியா

கரையைக் கடக்க தொடங்கியது டவ்-தே புயல் - முன்னெச்சரிக்கை தீவிரம்

EllusamyKarthik

அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர புயலான டவ்-தே புயலின் கண் பகுதி டையூ பகுதியை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகம் வரை கடுவெளி காற்று வீசலாம் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மும்பையை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப் புயல் கடந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் புயல் கரையை முற்றிலுமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிகிறது. இதனை இந்திய வானிலை மையம் உறுதி செய்துள்ளது. 

இந்தப் புயலால் பலத்த மழையும் மும்பையில் பதிவாகி உள்ளது. மரங்கள் வேரூடன் சாய்ந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 

டையூ பகுதியில் மீட்பு பணிக்காக பத்து ராணுவ குழு தயாராக உள்ளது, மும்பையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.