இந்தியா

செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை

செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை

webteam

சாலையில் சென்ற யானையுடன், செல்பி எடுக்க முயன்றவர் யானையால் மிதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பாய்க் கிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்குள்ள மலைகளை சுற்றிப் பார்ப்பதற்கே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துச் செல்கின்றனர். இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சாதிக் ரகுமான் என்ற நபர் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யானை ஒன்று நடந்து சென்றுக்கொண்டிருந்தது. யானை கண்ட சாதிக் காரில் இருந்து இறங்கி அதனுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தார். 

அப்போது அவரைக் கண்ட யானை அதிவேகமாக சென்று ஆக்ரோஷத்துடன் அவரது போனை உடைத்தது. அதிர்ச்சியில் உறைந்த சாதிக் அங்கிருந்து செல்வதற்குள் யானை அவரை காலால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோ தற்சமயம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.