இந்தியா

டிஜிட்டலில் ஜிஎஸ்டி அறிக்கை தாக்கல்: மத்திய அரசு தீவிரம்

டிஜிட்டலில் ஜிஎஸ்டி அறிக்கை தாக்கல்: மத்திய அரசு தீவிரம்

webteam

மத்திய கணக்கு தணிக்கை வாரிய அறிக்கையை டிஜிட்டலில் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதன்முறையாக ஜிஎஸ்டி குறித்த தணிக்கை அறிக்கையை டிஜிட்டலில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை வாரிய முன்னாள் தலைவர் ஷர்மா கூறியுள்ளார். டிஜிட்டல் மயமாக்கலுக்காக பெங்களூருவில் சமீபத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய டெல்லி தலைமை அலுவலகத்தில் மிகப்பெரிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஷர்மா கூறியுள்ளார். டிஜிட்டல்மய அறிக்கைக்கு முன்னோட்டமாக 24 திட்டங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.