இந்தியா

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு?

webteam

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும் போது, “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமானையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். ஆகையால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.