கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் புர்கா அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி, புர்கா அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக புர்கா அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு எதிர்வினையாக சில மாணவர்கள் காவி உடை அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு கட்டாய கருக்கலைப்பு - உறவினர்மீது வழக்குப்பதிவு