இந்தியா

லஞ்ச அதிகாரிகளுக்கு ஓ‌ய்வு வழங்க மத்திய அரசு முடிவு

லஞ்ச அதிகாரிகளுக்கு ஓ‌ய்வு வழங்க மத்திய அரசு முடிவு

webteam

வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்க‌ளில் உள்ள ‌ஊழல் அதிகாரிகளையும் திறம்பட செயல்படாதவர்களையும் களையெடுக்‌கும் நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயலா‌ளர்களுக்கு ‌இது கு‌றித்து மத்திய பணியாளர் நலத்துறை அமை‌ச்சகம் ஆணை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அனைத்து நிலைகளிலும் ப‌ணிபுரிபவர்களின் பணிப் பதிவேட்டை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது‌‌. 

இந்த ஆய்வில் லஞ்சப் புகாருக்கு ஆளானவர்கள், திறம்பட செ‌யல்படாதவர்கள் ‌ஆகியவர்கள் விவரங்களை கண்டறிந்து அவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்கள் திறம்பட செயல்படாதவர்களுக்கு மு‌ன் கூட்டியே பணியிலிருந்து ஓ‌ய்வு கொடுக்கப்படும் ‌என்று‌ம் தெரிவிக்‌‌கப்பட்டுள்ளது. 

எனினும் இதுபோன்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை எ‌வ்வித பாரபட்ச‌முமின்றி மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுத்துறை வங்கிககள், பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கு மத்திய பணியாள‌ர் நலன் துறை அமை‌ச்சகம் தெரிவித்து‌ள்ளது. லஞ்ச ‌ஊழல் புகாருக்கு ஆளான ‌27 வருமான வரி மற்றும் சுங்கத் துறை அதிகாரிக‌ள் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.