இந்தியா

செல்போன் மோகத்தில் 3 பேர் நீரில் முழ்கி உயிரிழப்பு

செல்போன் மோகத்தில் 3 பேர் நீரில் முழ்கி உயிரிழப்பு

webteam

தெலங்கானாவில் செல்போனில் வீடியோ எடுக்கும் மோகத்தில் கால்வாயில் இறங்கிய மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜனகம்மா மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவர் திவ்யா என்ற பெண்ணை ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில், திவ்யாவின் தாய் வீடான கிட்டேபண்டா சென்றுள்ளனர். அப்போது அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது உறவினர்களான சங்கீதா, சுமலதா ஆகியோருடன் அவினாஷ் நர்மதா ஆற்றின் பொம்மக்கூறு அணை கால்வாய் அருகே சென்றுள்ளார். அங்கு திவ்யா கரையோரத்தில் நின்றபடி செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் அவினாஷ், சங்கீதா, சுமலதா ஆகியோர் தண்ணீரில் இறங்கி ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் திடீரென அவினாஷ் நீரில் மூழ்கியுள்ளார்,அப்போது சங்கீதா, சுமலதா ஆகியோர் அவினாஷை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கவனித்த திவ்யா சத்தம் போட்டபடி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள், தண்ணீரில் இறங்கி மூவரின் சடலத்தையும் மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரணம் அடந்த மூன்று பேரின் உடல்களையும் ஜனகாம்மா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.