இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தடை மசோதா கொண்டு வரப்பட உள்ளது!

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தடை மசோதா கொண்டு வரப்பட உள்ளது!

EllusamyKarthik

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனையை முறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ மின்னணு கரன்சி மசோதா 2021 என்ற பெயரில் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. 

தனியார் கிரிப்டோகரன்சிக்கள் அனைத்தையும் தடை செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. அதேநேரம் ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமான மின்னணு கரன்சியை அறிமுகம் செய்ய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் உள்ள பிரச்னைகள் குறித்து அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. 

உள்துறை, நிதி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், தனியார் கிரிப்டோகரன்சியால் நிதிமோசடிகள் நடைபெறவும், பயங்கரவாதத்திற்கு நிதி சென்று சேரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் கிரிப்டோகரன்சிகளை முற்றிலும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு கரன்சியை அறிமுகம் செய்யவும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.