இந்தியா

ஓடும் காரில் நாய்க்குட்டியை செருப்பு கால்களால் எட்டி உதைக்கும் பெண்?: வைரலான வீடியோ

ஓடும் காரில் நாய்க்குட்டியை செருப்பு கால்களால் எட்டி உதைக்கும் பெண்?: வைரலான வீடியோ

EllusamyKarthik

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஓடும் காரில் நாய்க்குட்டியை பெண் ஒருவர் சித்திரவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனையடுத்து அந்த வீடியோவில் அடையாளம்  காணப்பட்ட தம்பதியர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற நாய்க்குட்டி ஒன்றை காரின் முன் பக்க பயணியின் இருக்கைக்கு கீழ் பக்கம் உள்ள மிதியடியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நாய் குட்டியை அந்த பெண் திரும்ப திரும்ப செருப்பு கால்களால் எட்டி உதைத்து துன்புறுத்தியுள்ளார். அந்த நாய்க்குட்டி கதறும் சத்தமும் கேட்கிறது. 

‘என்னையா கடிக்கிறாய்?’ என அந்த பெண் கேட்கும் குரலும் கேட்கிறது. 

‘அப்படி செய்யாதே, அது உன்னைக் கடிக்கும்’ என காரை ஓட்டுகிறவர் சொல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

‘அதனால் தான் நான் செய்கிறேன்’ என்று அந்த பெண் அதற்கு பதில் கூறுகிறார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் வெளியானதை அடுத்து அந்த தம்பதியினருக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

"நாங்கள் இந்த வழக்கில் தொடர்புடைய தம்பதியினரை விசாரித்து வருகிறோம்” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில் அடையாளம் காணப்பட்ட தம்பதியினர் அதை மறுத்துள்ளதோடு ‘எங்களுக்கு எதிராக யாரோ அதை போலியாக உருவாக்கியுள்ளனர். வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய சைபர் கிரைம் போலீசாரிடம் செல்வோம்’ என்று தெரிவித்துள்ளனர்.