இந்தியா

இந்தியா: ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் தீபக் சாப்ரா!

இந்தியா: ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் தீபக் சாப்ரா!

EllusamyKarthik

இந்தியாவில் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்  Custom Pharma Services தலைவர் தீபக் சாப்ரா. ஹைதராபாத்தில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் மூன்றாவதாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி. 

ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் இந்த தடுப்பூசிக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஒரு டோசின் விலை 995 ரூபாய் மற்றும் 40 பைசாவகும். இந்த மருந்தை இந்தியாவில் விரைவில் உற்பத்தி செய்ய உள்ள டாக்டர் ரெட்டி லெபாரட்ரீஸ் இதனை உறுதி செய்துள்ளது. 

இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்கும் போது இதன் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் தவணை தடுப்பூசி கடந்த மே 1 அன்று இந்தியாவிற்கு வந்திறங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகள் வர உள்ளன. வரும் வாரம் முதல் இந்த தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு இந்த முயற்சி விடை கொடுக்கும் என தெரிகிறது.