இந்தியா

டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு!

டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு!

EllusamyKarthik

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைத்துள்ளது அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு. அந்த மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவினால் மக்களின் சுமை பெருமளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 2 சதவிகிதமும், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 1 சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு இதனால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. கலால் வரியை குறைத்ததோடு மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டுமென்ற கோரிக்கையையும் மத்திய அரசு முன் வைத்தது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சத்தீஸ்கர் அரசு முடிவு எடுத்து அறிவித்துள்ளது.