விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்தது மத்திய அரசு web
இந்தியா

விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு.. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!

விமான கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப்படுவதால் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு விதித்துள்ளது..

PT WEB

இண்டிகோ விமான ரத்துகளால் நாடு முழுவதும் விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை மிகப் பெருமளவில் உயர்த்தியுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இண்டிகோ விமானம்

இந்நிலையில், பொருளாதார வகுப்பிற்கான விமானகட்டணங்களுக்கு மத்திய விமானபோக்குவரத்து அமைச்சகம் உச்ச வரம்புவிதித்துள்ளது.

புதிய உச்ச வரம்பின்படி, பயணத் தூரம் 500 கிலோ மீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 7,500 ரூபாயாகவும், பயணத் தூரம் 500 முதல் 1,000 கிலோ மீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 12,000 ரூபாயாகவும், பயணத் தூரம் 1,000 முதல் 1,500 கிலோமீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 15,000 ரூபாயாகவும், பயணத் தூரம் 1,500 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 18,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ

இந்த உத்தரவு, நிலைமை சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும், அனைத்துவிமான நிறுவனங்களும் இந்தக் கட்டணவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.