இந்தியா

சமையல் எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்க -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

JustinDurai
சமையல் எண்ணெய்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் பண்டிகைக் காலத்தையொட்டி சமையல் எண்ணெய்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சமையல் எண்ணெய் வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோயாபீன்ஸ், சூரிய காந்தி எண்ணெய் மீதான சுங்க வரியும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்சூ பாண்டே, சமையல் எண்ணெய் வகைகளின் விலை, கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் உணவுத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.