பீகாரில் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தை நிதீஷ் குமார் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பீகாரின் பாபு சாபாகர் மாநிலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பீகாரில் நடைபெற்ற மொத்த திருமணங்களில் 69 சதவீதம் குழந்தை திருமணங்களாக இருந்தது. பின்பு சமீபத்திய ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை - 4’-இன் படி, கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மத்தியில் கல்வி அதிகரிப்பு காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. பீகாரின் கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.