இந்தியா

கோவிலை சுற்றிப் பார்த்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கீழே விழுந்து மரணம்

கோவிலை சுற்றிப் பார்த்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கீழே விழுந்து மரணம்

webteam

இந்தியாவை சுற்றி பார்க்க வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி ஒருவர் புகைப்படம் எடுக்கும்போது கிழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஸ்டோஸ்பரி. 56 வயதுடைய இவர் இந்தியாவின் பழமையான இடங்கள் மற்றும்  இந்தியப் பாரம்பரியத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவும் தனது மனைவியுடன் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ரோஜர், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் புகழ்பெற்ற ல‌ஷ்மி நாராயண் கோவிலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது கோவிலின் கட்டடக் கலையை வீடியோ எடுத்தப்படி மேல் பகுதிக்கு சென்ற அவரின் கால் தவறியதால் ரோஜர் கத்தியபடி கிழே விழுந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துயரமான சம்பவத்தை நேரில் பார்த்த அவரின் மனைவி அந்த இடத்திலே மயங்கி விழுந்துள்ளார். மேலும் ரோஜரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்பு அவரின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.