ஹைதராபாத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை வீட்டிற்குள் கொண்டு செல்ல வீட்டின் உரிமையாளர் மறுத்ததையடுத்து, அந்த சிறுவனின் உடல் இரவு முழுவதும் சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஈஸ்வரம்மா என்பவர் தனது இரு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகனான தசர்லா சுரேஷ் என்ற 11 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, ஈஸ்வரம்மா தனது மகனின் உடலை தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
ஆனால், வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் உடலை கொண்டு செல்லக்கூடாது என கடுமையாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த சிறுவனின் உடலை இரவு முழுவதும் சாலையிலேயே வைத்துள்ளனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஃப்ரீசர் பெட்டியை கொண்டு வந்து அதில் இறந்த சிறுவனின் உடலை வைக்க உதவியுள்ளனர்.