இந்தியா

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ! செயலிழக்க செய்தபோது விபரீதம்

webteam

இலங்கையில் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்தது. 

நேற்று இலங்கையில் ஈஸ்டர் திருநாளான்று தேவாலயங்கள், ஆடம்பர விடுதிகள் என 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 290 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து இலங்கையின் வர்த்தக மையம் அமைந்துள்ளதற்கு அருகே உள்ள கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெடனேட்டர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடமeட்டாம் அங்கு அதிகம் காணப்படவில்லை. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட டெடனேட்டர்களுக்கும், நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என இலங்கை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்தது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடைபெற்று வருகிறது. செயலிழக்கப்பட்டபோது அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதால் சந்தேகப்படும் நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.